❤️GPM சொந்தங்கள்❤️ வாட்ஸ்அப் குழு சார்பாக ஆஷுரா நோன்பு கஞ்சி நன்கொடை வசூல்.
கோபாலப்பட்டினம்,ஜூலை.17-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் கிராமத்தில் ஆஷுரா நோன்பை முன்னிட்டு கோபாலப்பட்டினம் ஜமாத் சார்பாக இரண்டு நாள் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.
எனவே நோன்பு கஞ்சி செய்வதற்கான செலவை தங்கள் பங்களிப்பாக வழங்க வேண்டும் என்று GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு சார்பாக நோன்பு கஞ்சி செய்வதற்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய மண்ணின் மைந்தர்கள் தமக்கு இயன்ற அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கினர்.
இரண்டு நாள் நோன்பு கஞ்சி செய்வதற்கான செலவாக ரூபாய் 41,250 தொகை வசூலிக்கப்பட்டது. இந்த தொகையை ரொக்கமாக “GPM சொந்தங்கள் வாட்ஸ் அப் குழு” சார்பாக பாண்டியர் சேக்காதி மாமா அவர்கள் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் ஜமாத் தலைவரிடம் வழங்கினார்.
இது போன்று ஊர் நலம் சார்ந்த விஷயங்களில் அக்கறையாய் ஈடுபட்டு வசூல் செய்து தேவைகளை பூர்த்தி செய்து வருகின்ற “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழுவினருக்கும்” தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்ற நல்ல உள்ளங்களுக்கும் இறைவனின் பொருத்தம் உண்டாகட்டுமாக!, உங்கள் அனைவருக்கும் GPM தலைமறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வரக்கூடிய காலங்களில் இது போன்று அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.