மணமேல்குடியில் உலக கடல்பசு தின விழிப்புணர்வு.
மணமேல்குடி மே 29.
இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உலக கடல்பசு தினத்தை முன்னிட்டு கடல் பசுவின் முக்கியத்துவம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் விழிப்புணர்வு குறித்து “வாங்க கடல் வாழ்க்கை பற்றி வரையலாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டி நடத்தியது.
இதில் 50 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டு கடல் பசு மற்றும் கடலில் உள்ள உயிரினங்களை வரைந்து அவற்றின் முக்கியத்துவத்தை கூறியும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் , அறந்தாங்கி வனச்சரகர் மணிவெங்கடேஷ், இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த ஸ்வேதா, சாகர் ராஜ்புக்கர், ஆகர்ஷ், பிரவீன் மற்றும் அஜித் குமார் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதல்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/img-20240528-wa00378422540944867809842-1024x768.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/img-20240528-wa00493148318088112229678-1024x768.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/img-20240528-wa0040926410089346730170-1024x768.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/img-20240528-wa00442723526489775670942-768x1024.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/img-20240528-wa00461581238044441115853-1024x768.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/img-20240528-wa0038842615693977075822-1024x683.jpg)