பள்ளி, கல்லூரிகளுக்கான 20-20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் அணிகள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி, கல்லூரிகளுக்கான 20-20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் அணிகள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான 20-20 கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது.
செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பைகள் வழங்கப்படும்.
மேலும், முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கிட் பேக், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கிட் பேக், ஆட்ட நாயகன் விருதுகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்கு பெற விரும்புபவர்கள் தங்கள் நிறுவனத்தின் (பள்ளி, கல்லூரி) பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர் மற்றும் செல்போன் எண், ஊர், தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அனுமதியுடன் வரும் அணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 18-ந் தேதி ஆகும் என்று புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.




