தீபாவளி பண்டிகையையொட்டி நாகை- இலங்கை இடையே இந்த மாதம் முழுவதும் கப்பல் சேவை; இரு நாட்டு பயணிகள் கோரிக்கையை ஏற்று இயக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு; நாளை முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி நாகை- இலங்கை இடையே இந்த மாதம் முழுவதும் கப்பல் சேவை; இரு நாட்டு பயணிகள் கோரிக்கையை ஏற்று இயக்கப்படுகிறது.

நாகை- இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

Click here to Download

இதில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். 

இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இரு நாட்டு பயணிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த மாதம் (அக்டோபர்) முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் கப்பல் சேவை நாகை- இலங்கை இடையே நடைபெறும் என சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதாவது வருகிற 14, 21, 28-ந் தேதிகளில் செவ்வாய்க்கிழமைகளில் கப்பல் சேவை தொடர்ந்து நடைபெறும்.

வருகிற 20-ந்தேதி தீபாவளி அன்று மட்டும் இருவழி கப்பல் சேவை நடைபெறாது என்றும் சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button