ஏற்காடு மலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி.
ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சிகிச்சை பலன் இன்றி 2 பேர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேபோல் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 2 பேர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ
போட்டோ