பிப்ரவரி 1 முதல் புதிய விதிகள்: ஃபாஸ்டேக், பத்திரப்பதிவு முதல் வங்கி கணக்கு வரை – நீங்கள் அறிய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!

2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. ஃபாஸ்டேக் (FASTag), நிலப் பத்திரப்பதிவு, வங்கிச் சேவைகள் மற்றும் எரிவாயு விலை எனப் பல்வேறு துறைகளில் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
1. ஃபாஸ்டேக் (FASTag) விதிகளில் அதிரடி மாற்றம்
வாகன உரிமையாளர்களுக்குப் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- KYV நடைமுறை ரத்து: ஃபாஸ்டேக்குடன் இணைக்கப்பட்ட ‘வாகன விவரங்களை அறியும் முறை’ (Know Your Vehicle – KYV) இனி தேவையில்லை.
- வங்கியின் பொறுப்பு: ஃபாஸ்டேக் வழங்கும் முன்பே வாகன விவரங்களைச் சரிபார்க்கும் முழுப் பொறுப்பும் வங்கிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- தடையற்ற பயணம்: புகார்கள் அல்லது முரண்பாடுகள் இருந்தால் ஒழிய, பழைய பயனர்கள் மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இது டோல் பிளாசாக்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும்.
2. சொத்துப் பதிவில் ஆதார் கட்டாயம்
நிலம் மற்றும் சொத்துப் பதிவு முறையை அதிக வெளிப்படைத்தன்மையுடன் மாற்ற அரசு புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
- பயோமெட்ரிக் சரிபார்ப்பு: பிப்ரவரி 1 முதல் சொத்து வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் என அனைவரும் தங்களது ஆதார் விவரங்களை பயோமெட்ரிக் முறையில் சரிபார்ப்பது கட்டாயம்.
- போலி ஆவணத் தடுப்பு: இதற்காக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- மாற்று வசதி: கைரேகை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு முக அங்கீகாரம் (Face Authentication) அல்லது மொபைல் எண் மூலம் OTP முறை பயன்படுத்தப்படும். இது பினாமி சொத்துப் பதிவுகளைத் தடுக்க உதவும்.
3. செயலற்ற வங்கி கணக்குகள் முடக்கம்
ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி, வங்கிகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- கடந்த 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை எந்தவிதப் பணப் பரிவர்த்தனையும் (Transaction) செய்யப்படாத கணக்குகள் பிப்ரவரி 1 முதல் முடக்கப்படும் (Inactive).
4. பான் – ஆதார் இணைப்பு காலக்கெடு
உங்கள் பான் (PAN) கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ஆம் தேதியே கடைசி வாய்ப்பாக இருந்தது .
- இந்தத் தேதிக்குள் இணைக்கப்படாவிட்டால், பிப்ரவரி 1 முதல் பான் கார்டு செல்லாததாகிவிடும். இதனால் வங்கிப் பரிமாற்றங்கள், வருமான வரி தாக்கல் மற்றும் கடன் பெறுவதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும்.
5. சிலிண்டர் விலை மற்றும் வங்கி விடுமுறை
- எரிவாயு விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.111 உயர்ந்த நிலையில், பிப்ரவரி 1 அன்றும் புதிய விலை மாற்றங்கள் அறிவிக்கப்படும்.
- வங்கி விடுமுறை: பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் என மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1




