மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபொழுது மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி.

மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபொழுது மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி.
நாகை மாவட்டம் கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவருடைய மகன் தீபராஜ் (வயது13). இவன் திருப்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் தீபராஜ் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான். அப்போது மழை பெய்ததால் தீபராஜை திடீரென மின்னல் தாக்கியது.
இதில் மயங்கி விழுந்த அவனை உறவினர்கள் உடனடியாக மீட்டு நாகை அருகே உள்ள ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீபராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தீபராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





