ஆவுடையார்கோவில் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி; மின்கம்பி உரசி தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தது.

அறந்தாங்கி, செப்.22-
ஆவுடையார்கோவில் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி; மின்கம்பி உரசி தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தது.
ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் பகுதியில் இருந்து ஒரு லாரி வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் வந்த போது மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக வைக்கோல் உரசியதில் தீ பிடித்தது.
பின்னர் தீ மளமளவென பிடித்து லாரியிலும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





