வாகன விற்பனைக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி சுசுகி கார்களின் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு; ரூ.1¼ லட்சம் வரை குறைப்பு.

வாகன விற்பனைக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி சுசுகி கார்களின் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு; ரூ.1¼ லட்சம் வரை குறைப்பு.
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 4 அடுக்குகளாக வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை 2 அடுக்காக மாற்றியமைத்துள்ளது. கார்களுக்கான ஜி.எஸ்.டி.

வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த சீர்திருத்தம் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கான விலை குறைப்பு பட்டியலை அறிவித்துள்ளது.
அதன்படி எஸ்-பிரஸ்சோ ரூ.1,29,600, ஆல்ட்டோ கே10 ரூ.1,07,600, செலரியோ ரூ.94,100, வேகனார் ரூ.79,600, இங்னிஸ் ரூ.71,300 வரை விலை குறைக்கப்பட்டள்ளது. பிரீமியம் கார்களான ஸ்விப்ட் ரூ.84,600, பலினோ ரூ.86,100, டூர் எஸ் ரூ.67,200, டீசைர் ரூ.87,700 வரையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





