மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட முகாம் இன்று ஆகஸ்ட் 8 நடைபெறுகின்றது.

மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட முகாம் இன்று ஆகஸ்ட் 8 நடைபெறுகின்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 08.08.25 வெள்ளிக்கிழமை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் நடக்கிறது.
ஆவுடையார்கோவில்- 5 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மீமிசல் பேரிடர் மேலாண்மை கட்டிடத்திலும், மணமேல்குடி- 4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கரகத்திகோட்டை சேவை மையக் கட்டிடத்திலும் நடைபெற உள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாநகராட்சி, 13 மற்றும் 15 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வடக்கு 3-ம் வீதியில் உள்ள கார்த்திக் மஹாலிலும், அறந்தாங்கி நகராட்சி, 14 மற்றும் 15 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அறந்தாங்கி வசந்தம் திருமண மஹாலிலும், அரிமளம்- 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கைக்குலான்வயல் சமுதாய கூடத்திலும் நடைபெற உள்ளது.
இதேபோல அன்னவாசல்- 4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு இருந்திராப்பட்டி சமுதாய கூடத்திலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்துள்ளார்.
குறிப்பு:
கடந்த புதன் கிழமை அன்று மீமிசலில் நடைபெற்ற இந்த முகாம் நாட்டாணி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளுக்கு நடைபெற்றது. இன்று நடக்ககூடிய முகாம் மீமிசல் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிக்கான முகாம் ஆகும்.
ஆனாலும் இந்த முகாமில் அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.





