மணமேல்குடி ஒன்றியத்தில் நூறு நாட்களில் 100% தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணித அடிப்படை திறன்களில் முன்னேற்ற அடைவினை மதிப்பீடு செய்யும் பணி.

மணமேல்குடி ஒன்றியத்தில் நூறு நாட்களில் 100% தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணித அடிப்படை திறன்களில் முன்னேற்ற அடைவினை மதிப்பீடு செய்யும் பணி.

மணமேல்குடி ஒன்றியத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கான நூறு நாட்களில் 100% தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணித அடிப்படை திறன்களில் முன்னேற்ற அடைவினை மதிப்பீடு செய்யும் பணியானது இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐந்து பள்ளிகளில் 100 நாட்களில் 100 சதஅடைவு மதிப்பீட்டினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திரு.செழியன் அவர்களின் தலைமையிலும் வட்டார கல்வி அலுவலர் திருமதி அமுதா அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களின் அடிப்படை திறன்களான தமிழ் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் அடிப்படை கணித முன்னேற்றங்களை மதிப்பீடு செய்து 100 நாட்களில் 100 சதவீதம் முன்னேற்றம் அடைந்ததினை மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பானா வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொன்னகரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டுமாவடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலஸ்தானம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெள்ளூர் ஆகிய பள்ளிகளில் 100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் அடிப்படை கணித மதிப்பீடுகளை மேற்கொள்ளப்பட்டது.

இப்பள்ளிகள் 100 நாட்களில் 100 சதவீதம் அடிப்படைத் திறன்களை பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார், திரு பன்னீர்செல்வம் ஆகியோர் மதிப்பீடு செய்தனர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button