தாழனூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு
ஆவுடையார்கோவில், டிச.16-
தாழனூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு ஆவுடையார்கோவில் தாலுகா தாழனூர் கிராமத்தில் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நாகம்மாள் (வயது 85), முத்துக்கனி (55). இப்பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறி இவர்களது வீட்டை சூழ்ந்தது. இதனால் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு மூலம் வீட்டில் இருந்த 2 பெண்களையும் மீட்டு பத்திரமாக வெளியே ெகாண்டு வந்தனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1