கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் கோரிக்கை
அறந்தாங்கி டிசம்பர் 15
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் கோரிக்கை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சித்திக் ரகுமான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடலோரப் பகுதிகளான கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கம்மாபட்டினம், அம்மாபட்டினம் போன்ற பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
கிருஷ்ணாஜிபட்டினம் எம்ஜிஆர் நகரில் பள்ளிவாசல், மருத்துவமனை, பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். மேலும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். எம்ஜிஆர் நகர் மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சித்திக் ரகுமான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் வடக்கம்மாபட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தன்னார்வர் களுடன் இணைந்து உணவு வழங்கினர். விச்சூர், தப்பத்தான்வயல் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பால், பிஸ்கட், சீனி உள்ளிட்ட பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது