தேசிய கல்வி உதவித்தொகை
மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை 16.10.24 கடைசி நாள் ஆகும்.
மத்திய அரசு, நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் போன்ற பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
தேசிய கல்வி உதவித்தொகை
2024-25 கல்வியாண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இணையதளத்தில் வெளியிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான பெற்றோரின் வருடாந்திர வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாகும். இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பதாரர்களுக்கு நாளை (புதன்கிழமை) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும்.
கல்வி நிறுவனங்கள் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும்.
வழக்கமான விண்ணப்பதாரர்கள்
கடந்த ஆண்டில் உதவித்தொகை பெறுபவா்களாக இருந்த மாணவர்கள், 2024-25 கல்வியாண்டிற்கு தங்கள் விண்ணப்பத்தை புதுப்பிக்கவும் இதற்கான ஆன்லைன் பதிவு மேற்கொள்ளவும் முடியும்.
புதிய விண்ணப்பதாரர்கள், குறிப்பாக 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்கள், 8 மற்றும் 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இவ்வாறு 60 சதவீதம் மற்றும் அதற்கும் மேலான மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்தால், ஓ.டி.ஆர்.
மற்றும் ரகசிய குறியீடு எண்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு அனுப்பப்படும்.
இணையதளம் மற்றும் கூடுதல் தகவல்கள்
தகுதியான மாணவர்கள் scholarships.gov.in அல்லது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளமான socialjustice.gov.in-இல் கூடுதல் விவரங்களை அறிந்து, உதவித்தொகை பெறலாம்.