நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 23-ம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு.

நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் செப். 20 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 23 ஆம் காலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் செப்.20ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 23-ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 (வெள்ளிகிழமை) இரவு 20.00 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 06.00 வரை, பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே பாஸ்போரட் விண்ணப்பதாரர்கள் அனைத்துவிதமான சேவைகளுக்கும் (பாஸ்போரட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும்) தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button