கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பாக 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கோபாலப்பட்டினத்தில் இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
காலை கோபாலப்பட்டினம் ஜும்மா பெரிய பள்ளி வளாகத்தில் ஜமாத் தலைவர் ஆர்.எஸ்.எம் அன்சாரி அவர்கள் பள்ளி மாணவர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், நடுநிலைப்பள்ளி மாணவச் செல்வங்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் சாலமன் அவர்கள், கோபாலப்பட்டினம் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கொடி ஏற்றிய பின் அனைவருக்கும் இனிப்புகள் பரிமாறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பாக அனைவருக்கும் இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
GPM தலைமுறை மீடியாவின் சொந்தங்கள், நட்புகள், உறவுகள், வாசகர்கள் அனைவருக்கும் 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.