ஒரு நபரின் பெயரில் 9-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை – புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
இனி இந்தியர்கள் தங்கள் பெயர்களில் 9-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை மற்றும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
சிம் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நடப்பதால், ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ், நாடு முழுவதும் ஒருவர் தனது பெயர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும், விதியை மீறினால் ரூ.3 லட்சம் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்போன் எண்கள் மூலமாக பல மோசடிகளை செய்துவிட்டு, மோசடிக்குப் பயன்படுத்தும் சிம் கார்டுகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சிம் கார்டுகள் மூலம் மோசடியை அரங்கேற்றும் மோசடிக் கும்பலை முடக்கவே, நாடு முழுவதும் ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உங்கள் பெயரில் உள்ள தொலைபேசி எண்ணை எவ்வாறு பார்ப்பது