பாலஸ்தீனத்தின் மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை, ஜூன்.3-
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், துரை.நாராயணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கட்சி சார்ந்த அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் புதுக்கோட்டை நகரச் செயலாளர் சோலையப்பன் நன்றி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1