தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ், 25 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், சேரும் நலிவடைந்த மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எல்.கே.ஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?