கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா அவர்களை கொலை செய்த கும்பல்: உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலை மறியல்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார்.

கொலை செய்யப்பட்ட நைனா முகமது

இவர் நேற்று திங்கள் கிழமை 23.04.2024 இரவு 11.30 மணி அளவில் கடை அடைத்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும் பொழுது கோபாலப்பட்டினம் பிராதன சாலையான மில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்க தொடங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலை மறியல்

கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள்,  ஊர் பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், ஜமாத் நிர்வாகிகள் என அனைவரும் ஒன்றாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
22
+1
0
+1
0
+1
0
+1
17
+1
5

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button