இளம் விஞ்ஞானியாக வேண்டுமா? இஸ்ரோவின் ‘யுவிகா’ திட்டத்திற்கு பிப். 27 முதல் விண்ணப்பிக்கலாம்!

இளம் விஞ்ஞானியாக வேண்டுமா? இஸ்ரோவின் ‘யுவிகா’ திட்டத்திற்கு பிப். 27 முதல் விண்ணப்பிக்கலாம்!

இளம் விஞ்ஞானியாக வேண்டுமா? இஸ்ரோவின் ‘யுவிகா’ திட்டத்திற்கு பிப். 27 முதல் விண்ணப்பிக்கலாம்!

ISRO Yuvika 2026 Young Scientist Program Registration Starts Feb 27 – GPM Thalaimurai Media

பள்ளி மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டுதோறும் ‘யுவிகா’ (YUVIKA – Yuva Vigyani Karyakram) என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான (2026) விண்ணப்பப் பதிவு குறித்து இஸ்ரோ மையத் தலைவர் வி.நாராயணன் முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தற்போது 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவியர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஜனவரி 1, 2026 நிலவரப்படி இந்தியாவில் உள்ள எந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.

முக்கியத் தேதிகள்:

  • விண்ணப்பப் பதிவு தொடக்கம்: பிப்ரவரி 27, 2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31, 2026
  • தேர்வுப் பட்டியல் வெளியீடு: ஏப்ரல் 13, 2026 (முதல் பட்டியல்), ஏப்ரல் 20 (2-வது பட்டியல்)
  • பயிற்சி காலம்: மே 11 முதல் மே 22 வரை (2 வாரங்கள்)

தேர்வு முறை எப்படி?

மாணவர்களின் முந்தைய கல்வித் தகுதி, ஆன்லைன் வினாடி வினா (Online Quiz) முடிவுகள், கடந்த 3 ஆண்டுகளில் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்பு மற்றும் இதர கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சி எங்கே நடக்கும்?

மகேந்திரகிரி திரவ உந்துவிசை மையம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம், பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 9 இஸ்ரோ மையங்களில் இந்தப் பயிற்சி நடைபெறும்.

சிறப்பம்சங்கள்:

தேர்வு செய்யப்படும் மாணவர்களின் தங்குமிடம், உணவு மற்றும் படிப்பு உபகரணங்களுக்கான முழுச் செலவையும் இஸ்ரோவே ஏற்கும். மேலும், மாணவர்களுக்கான பயணக் கட்டணமும் (2-ம் வகுப்பு ஏசி ரயில் அல்லது பேருந்து) இஸ்ரோவால் திரும்ப வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 27 முதல் பதிவு செய்யலாம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button