மீமிசல் அருகே குமரப்பன்வயலில் சரக்கு வேன் மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு கோட்டைப்பட்டினம் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்த தனியார் பார்சல் நிறுவனத்தின் லாரியும், மல்லிப்பட்டினத்தில் இருந்து வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மீமிசல் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு வேணும் குமரப்பன்வயல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்துகொண்டிருந்த பொழுது இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சரக்கு வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. சரக்கு வேனை ஓட்டி வந்த கீழஏம்பலை சேர்ந்த வெங்காய வியாபாரி ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மீமிசல் அருகே குமரப்பன்வயலில் சரக்கு வேன் மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி.

லாரி ஓட்டுனருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

கோட்டைப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் மீமிசல் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உயிரிழந்த ஓட்டுநர் ஜெயசீலனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button