கோபாலப்பட்டினத்தில் தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுமியை துரத்திக் கடிக்க வந்த தெரு நாய்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் நேற்று 29.12.25 திங்கள் கிழமை அன்று தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுமியை தெருநாய் ஒன்று துரத்திக் கொண்டு கடிக்க முற்பட்டது.
உடனே அருகில் இருந்த நபர் ஒருவர் கடிக்க வந்த அந்த நாயை விரட்டி விட்டு அச்சிறுமியை பத்திரமாக மீட்டார்.
நாய் கடிக்க துரத்தியதில் அச்சம் அடைந்த சிறுமி அழுது கொண்டே அங்கிருந்து வீட்டிற்கு சென்றார்.
இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பல தடவை நிகழ்ந்திருக்கின்றது.
கோபாலப்பட்டினத்தில் சாலை ஓரத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால், குப்பைகளில் கிடக்கும் கழிவுகளை உண்பதற்கு தெருநாய்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்றனர்.
இதனால் தெரு நாய்கள் ஊருக்குள் புகுந்து தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியோர்களை கடித்தும் உள்ளது.
ஊருக்குள் சுற்றி தெரியும் தெரு நாய்களை புடித்து அப்புறப்படுத்தக்கோரி பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனுவாக எழுதி கோரிக்கைகள் வைத்துள்ளனர். ஆனாலும் ஊருக்குள் சுற்றி தெரியும் நாய்களை பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
ஆகவே நாட்டானி புரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே இதுபோன்ற நாய்க்கடி சம்பவங்கள் அடிக்கடி நடப்பதற்கு காரணமாக அமைகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகின்றனர்.
எனவே பெரியோர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் சென்று வீடு வரும் வரை விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.






