விராலிமலை அருகே வாகனச்சோதனையில் ரூ. 4 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் பறிமுதல்.

விராலிமலை,ஏப்ரல்.04-

விராலிமலை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச்சோதனையில் கணக்கில் வராத ரூ. 4 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள நிலையில், கரூா் மக்களவைத் தொகுதி, விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட விராலிமலை – திருச்சி சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவ்வழியே மதுரை நோக்கிச் சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 4 கோடியை 18 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி ஆபரணப் பொருள்களை பறிமுதல் செய்து இலுப்பூா் கோட்டாட்சியா் தெய்வநாயகியிடம் ஒப்படைத்தனா். அதனை அவா் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button