ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் – சென்னையில் 8ம் தேதி குறைதீர் முகாம்!

தமிழ்நாடு பிப். 8 –
தமிழ்நாடு அரசு, பொதுவினியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் நடத்தவுள்ளது.
முகாம் எப்போது, எங்கே?
சென்னையிலுள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில், 08.02.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை குறைதீர் முகாம் நடைபெறும்.
என்னன சேவைகள் வழங்கப்படும்?
இந்த முகாமில், பொதுமக்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கான முக்கிய திருத்தங்களை செய்யலாம், அவை: பெயர் சேர்த்தல் / நீக்கம்
முகவரி மாற்றம்
செல்போன் எண் மாற்றம்
மற்றும் தொடர்புடைய மற்ற சேவைகள்
அரசின் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்திலும் இந்த குறைதீர் முகாம்கள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு, அருகிலுள்ள உணவுப் பொருள் வழங்கல் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.