விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

கந்தர்வகோட்டை, மார்ச்.28-

கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் பத்மநாதன், மாவட்ட தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கி ேபசுகையில், காவிரியில் நமக்கான தண்ணீரை போராடி பெற்று வருகிறோம். இந்த போராட்டம் என்பது விவசாயிகளின் ஒற்றுமையால் நடைபெற்று வருகிறது. வருங்காலங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை முழுமையாக பெறுவதற்கு மேலும் போராடும் நிலை தான் உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அரசு நலத்திட்டங்கள் மற்றும் வேளாண் துறையின் மானியங்களை பெறாத விவசாயிகளுக்காக சங்கத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாகவும், விவசாயிகளின் தேவைகளை அறிந்து சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் கூறினார். இதில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button