கோபாலப்பட்டினம் காட்டுக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.
கோபாலப்பட்டினம்,மார்ச்.26-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் காட்டுக்குளம் உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த குமார் (45) என்பவர் கோட்டயன் தோப்பில் உள்ள சாக்கு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் செவ்வாய் கிழமை மதியம் 3.30 மணி அளவில் காட்டுக் குளத்திற்கு குளிப்பதற்காக வந்தார்.
குளித்துக் கொண்டிருக்கும் பொழுது குமார் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது உடனே அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர் ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மீமிசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீமிசல் காவல்நிலைய காவலர்கள் உடலை கைப்பற்றி கோபாலப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.