கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு

கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு

புதுக்கோட்டை, டிச.17-

கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு . மோசடியில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

ரூ.2 கோடி மோசடி

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த 3 பேர் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்பி கொடுக்காமல் ரூ.2 கோடி மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீதும், பணத்தை திரும்ப பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கும் படி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு அளித்தனர்.

418 மனுக்கள்

இதேபோல ஆலங்குடி அருகே கோவிலூர் பாலபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளில் ஆதிதிராவிடர் காலனி பகுதி மக்களையும் இணைத்து செயல்படுத்த நடவடிக்கை கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கறம்பக்குடி தாலுகா மேலபொன்னன்விடுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி, அக்கிராம பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இலுப்பூர் தாலுகா மருதம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் பகுதியில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்த நிலையில், புதுப்பித்து தர கோரி மனு அளித்தனர்.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 418 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா கோரி, மனு அளித்த 2 பேருக்கு பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.

வங்கி காசோலை

அதன்பின் அறந்தாங்கி வட்டம், ரெத்தினக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ முகமது கமீல் முகமது பக்ருதீன் என்பவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து வரப்பெற்றுள்ள இறப்பு இழப்பீட்டுத் தொகையினை, அவரது வாரிசுதாரரான மனைவி ஆஷாவிடம் ரூ.1,82,576 மதிப்பிலான வங்கி காசோலையையும் கலெக்டர் அருணா வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனர்.ரூ.41.24 கோடி ஒதுக்கீடு

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button