மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு : இரண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து மணமேல்குடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நஸ்மின் ரசீது ஹமதியா என்ற மாணவி இதுவரை பள்ளிக்கு செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டது.
இதே போல் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து துர்க்கேஸ்வரன் மாணவர் இடம்பெயர்ந்து மணமேல்குடி குடியிருப்பில் வசிப்பது தெரிய வந்தது.
இம்மாணவர் கறம்பக்குடி ஒன்றியத்தில் ராங்கியன் விடுதி பள்ளியில் படித்து வந்ததாக தகவல் தெரிவித்தார். நான்காம் வகுப்பில் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதற்காக மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு . வீரமணி மற்றும் ஆசிரியர் உமா ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டனர்.