அறந்தாங்கி அருகே அரசு மகளிர் பள்ளியில் இந்திய மொழிகளின் திருவிழா
அறந்தாங்கி, டிச.13-
அறந்தாங்கி அருகே அரசு மகளிர் பள்ளியில் இந்திய மொழிகளின் திருவிழா மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகளின் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மெர்ஸி தலைமை தாங்கினார். இதையடுத்து பள்ளியில் இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பு, தொன்மை பாரம்பரியம், மொழி மற்றும் தொழில்நுட்பம், மொழி பட்டறை, பேச்சுத்திறன் ஆகிய தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் பாரதி நினைவுகள் குறித்து பேசி, திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். நிறைவு நாளான நேற்று முன்தினம் பாரதியின் பிறந்தநாளில் பேச்சுத்திறன் தலைப்பில் பாரதியின் தொலைநோக்கு பார்வை சார்ந்து கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் உதவி தலைமை ஆசிரியர் நஸிமாபானு, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.