புதுக்கோட்டையில்தொடர் மழையால் வேரோடு சாய்ந்த வாகைமரம்
புதுக்கோட்டை, டிச.13
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் நேற்று முன் தினம் இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில்தொடர் மழையால் வேரோடு சாய்ந்த வாகைமரம். அரசு மன்னர் கல்லூரி அருகே புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிபதி முகாம் அலுவலகத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய வாகை மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் மின்கம்பிகள், கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்தது. முகாம் அலுவலகத்தின் சுற்றுச்சு வரும் சேத மடைந்தது.
இதனால் அரசு மன்னர் கல்லூரியிலிருந்து புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேரோடு சாய்ந்த மரத்தை மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு, வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரம், மரம் அறுக்கும் எந்திரம் உள்ளிட்ட வற்றால் அப்புறப்படுத்தினர். ஆதனக்கோட்டைசுற்றுவட்டாரபகுதிகளிலும் கனமழை பெய்தது