“GPM மக்கள் மேடை” மருத்துவமனை திறப்பு விழா
கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடையின் மருத்துவமனை திறப்பு விழா நாளை 13.12.24 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் GPM மக்கள் மேடை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு கொண்டு வருகிறது.
GPM மக்கள் மேடையின் சார்பாக கோபாலப்பட்டினத்தில் கல்வி, மருத்துவம், உணவு, சுகாதாரம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட சேவைகள் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி GPM மக்கள் மேடை சார்பாக தற்பொழுது சிறப்பு மருத்துவமனை ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இங்கு மருத்துவம் இலவசமாக பார்க்கப்படும் மேலும் மருந்துகள் சலுகை விலையில் வழங்கப்படும்.
இந்த மருத்துவமனை வாரம் ஒரு முறை என்ற கணக்கில் காலை 8 மணி முதல் 9 மணி வரை செயல்படும் என்று நோக்கத்தோடு தொடங்கப்பட உள்ளது.
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பொது மற்றும் குழந்தைகள் நல மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் தமீம் அன்சார் அவர்கள் சிறப்பு மருத்துவராக வருகை தர உள்ளார்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
GPM மக்கள் மேடையின் இந்த சிறப்பு மருத்துவமனை திட்டத்திற்கு GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.