ஆதரவற்ற, கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்.

ஆதரவற்ற, கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம் தமிழக அரசு அறிவிப்பு.

மாவட்டத்திலுள்ள கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது. தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்துள்ளது.

கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்கள் ஆகியோர் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளியமுறையில் பெற இணையதளம் மூலம் நேரடியகவும் அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள இ.சேவை மையங்களிலும் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம்.

மேலும் வாரியத்தின்,

https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home என்ற வலைபயன்பாட்டின் (Web Application) வாயிலாக பதிவு செய்யும் உறுப்பினர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளான சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் தொடங்கிட 50,000 மானியம் பெற இன்னும் பிற உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

அரசு ஆணையின்படி கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் துவங்க கீழ்கண்ட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது:-

  • வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • 25-45 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- (ஒரு லட்சம் இருபது ஆயிரத்திற்குள்) மிகாமல் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- (ஒரு லட்சம் இருபது ஆயிரத்திற்குள்) மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஒருவர் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதி உடையவர் ஆவார்.

சுயதொழில் புரிய மற்றும் மானியம் பெற இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-

  • 1. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு (Self Declaration Certificate).
  • 2. (Income Certificate).
  • 3 . குடும்ப அட்டை நகல் (Ration Card Xerox).
  • 4. ஆதார் அட்டை நகல் (Aadhaar Card Xerox).
  • 5. தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று (Any Proof for Current resident address).
  • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை MOIR தங்கள் வட்டாரங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர் நல அலுவலர், அல்லது மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடவளாகம் என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு:

சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button