அயலகத்தில் வேலை செய்யும் தமிழர்கள் 395 ரூபாய் கட்டினால் 5 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு; தமிழக அரசு அறிவிப்பு.
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்கள் 395 ரூபாய் கட்டினால் 5 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அயலகத் தமிழர்களுக்கான காப்பீடு திட்டத்தின் நன்மைகள்
- குறைவான சந்தா கட்டணங்கள் தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டத்திற்கான சந்தா கட்டணம் INR 395 + Charges முதல் உள்ளது.
- தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டத்துடன் கூடுதலாக விருப்பத்தின் பேரில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு INR 350 + Charges முதல் வழங்கப்படுகிறது. விரிவான காப்பீடு அயலகத் தமிழர் அடையாள அட்டை வைத்திருப்பவருக்கு குறைந்தபட்சம் INR 5,00,000/- தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் விருப்பத்தின் பேரில் குறைந்தபட்சம் INR 1,00,000/-ற்கான தீவிர சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு வழங்கப்படுகிறது.
- விரிவான காப்பீடு அயலகத் தமிழர் அடையாள அட்டை வைத்திருப்பவருக்கு குறைந்தபட்சம் INR 5,00,000/- தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் விருப்பத்தின் பேரில் குறைந்தபட்சம் INR 1,00,000/-ற்கான தீவிர சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு வழங்கப்படுகிறது.
- புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல தீவிர நோய்களுக்கான காப்பீடு அளிக்கப்படுகிறது.
அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் 18 முதல் 55 வயது வரை உள்ள அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம்.
அயலகத் தமிழர் நலத்துறையின் இணையதளத்தில் https://nrtamils.tn.gov.in ஒரு முறை பதிவு கட்டணமாக 200 ரூபாய் செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம்.
இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயலக தமிழர்களுக்காக தமிழக அரசு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில் காப்பீட்டு தொகை சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ரூ. 395 + GST, 10 லட்சம் ரூபாய் மருத்து காப்பீட்டிற்கு ரூ 700 + GST என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அயலகத் தமிழர்களுக்கான காப்பீட்டு திட்டமானது (வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் வாழும் அயலகத் தமிழர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கும் திட்டமாகும்.
விண்ணப்பதாரர் பதிவுசெய்யப்பட்ட அயலகத் தமிழர் அடையாள அட்டை வைத்திருப்பவராக இருந்தால் மட்டுமே அயலகத் தமிழர் காப்பீடு பெற முடியும்.
அயலகத் தமிழர் காப்பீடு பயன்கள்
- அடையாள அட்டை வைத்திருப்பவருக்கு குறைந்தபட்சம் ரூ.1,00,000/-க்கான தீவிர நோய்க்கான காப்பீடு.
- கட்டாயமற்ற கூடுதலான தனிநபர் விபத்து காப்பீடு ரூ.10,00,000/- வரை.
- புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் உள்ள பல தீவிர நோய்கள் அடங்கும். (இந்தப் பக்கத்தின் முடிவில் விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது).
- தீவிர நோய்க்கான காப்பீட்டுத் தொகைக்கான குறைந்த வருடாந்திர கட்டணத் தொகை ரூ.350 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து).கட்டாயமற்ற தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.395 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து) குறைந்த வருடாந்திர கட்டணத் தொகை ரூ.1,750 கட்டணத் தொகை செலுத்தி தீவிர நோய்க்கான காப்பீட்டை ரூ.5,00,000/- வரை அதிகரிக்கலாம்.
- கட்டாயமற்ற தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.395 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து) குறைந்த வருடாந்திர கட்டணத் தொகை ரூ.1,750 கட்டணத் தொகை செலுத்தி தீவிர நோய்க்கான காப்பீட்டை ரூ.5,00,000/- வரை அதிகரிக்கலாம்.விபத்தின்போது காப்பீட்டினால் கிடைக்கும் பயன்கள்.
விபத்தின்போது காப்பீட்டினால் கிடைக்கும் பயன்கள்
- இறப்பு 100% காப்பீடு தொகை.
- இரண்டு கண்களின் பார்வை இழப்பு அல்லது இரண்டு கைகள் அல்லது இரண்டு கால்களையும் உடலில் இருந்து நீக்குதல் அல்லது ஒரு கை மற்றும் ஒரு காலினை முழுமையாக இழத்தல் அல்லது ஒரு கண்ணில் பார்வை இழத்தல் மற்றும் ஒரு கை அல்லது ஒரு காலினை இழத்தல் 100% காப்பீடு தொகை.
- இரண்டு கைகள் அல்லது இரண்டு கால்களையும் பயன்படுத்த இயலாமை அல்லது ஒரு கண்ணில் பார்வை இழப்பு 100% காப்பீடு தொகை.
- ஒரு கை அல்லது ஒரு காலை உடலில் இருந்து நீக்குவது அல்லது ஒரு கண்ணில் பார்வை இழப்பு 50% காப்பீடு தொகை.
மேலும் விவரங்களுக்கு
இது பற்றி மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
https://nrtamils.tn.gov.in/ta/services/nrt-welfare-board/insurance-board/