அறந்தாங்கி ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு.
அறந்தாங்கி,செப்.20-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் மாணவ இளைஞர்கள் பிரிவான ரோட்ராக்ட் இவ்வாண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமையில் துணை ஆளுநர் மருத்துவர் விஜய் ரோட்ராக்ட் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேவதி அனைவரையும் வரவேற்றார். ரோட்ராக்ட் புதிய தலைவராக சேவுகப்பெருமாள் செயலாளராக புகழேந்தி பொருளாளராக ராஜசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட புதிய தலைவர் இவ் வருடத்திற்கான புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முகமது பாரூக் ரோட்டரி மண்டல செயலாளர் செலக்சன் சுரேஷ்குமார் எவர்கிரீன் முனைவர் முபாரக் அலி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள். பாலிடெக்னிக் இருபால் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இறுதியில் ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ஆண்டோ பிரவின் அனைவருக்கும் நன்றி கூறினார்.