பாசிப்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.
இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினத்தில் “இராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம்” மற்றும் “மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை” இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், களியநகரி ஊராட்சி மன்ற தலைவர் Dr.அ.உம்முசலிமா நூருல் அமீன் தலைமையில் நாளை சனிக்கிழமை (07-09-2024) காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடம்:
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பாசிப்பட்டினம்.
கண் ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரை செய்தால் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக ஆப்ரேசன் செய்து வைக்கப்படும்.
குறிப்பு:
முகாமிற்கு வருபவர்கள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல் கொண்டு வரவும்.
தகவல்:
Dr.அ.உம்முசலிமா நூருல் அமீன்,
கலியநகரி ஊராட்சி மன்ற தலைவர்,
பாசிப்பட்டினம்-623409.