சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் & அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.
அறந்தாங்கி,ஆக.16-
அறந்தாங்கியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம். இம்முகாமில் 60 யூனிட்கள் இரத்தம் கொடையாக கொடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம் முகாம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட துணை தலைவர் மீரா தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கிளை தலைவர் முகமது தாரிக் , செயலாளர் முகமது சலீம் , பொருளாளர் முகமது இர்ஷாத் , துணைத்தலைவர் ரஹுமத்துல்லா, துணை செயலாளர் அப்துல் ஹாலித் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காவல் ஆய்வாளர் கருணாகரன் கலந்து கொண்டார். இதில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
மருத்துவ தகுதி அடிப்படையில் 60 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு, அரசு மருத்துவ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும் மருத்துவர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா நன்றியுறை நிகழ்த்தினார்.
அவர் கூறும்போது “ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்கள்.
இறுதியாக இம்முகாமில் பங்களிப்பு செய்த இரத்த வங்கி மேலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி மற்றும் கிளை நிர்வாகத்திற்க்கு நன்றியினைத் தெரிவித்தார்.