GPM மக்கள் மேடை சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம்,ஆக.15-
கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடை சார்பில் கோபாலப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை என்ற பொதுநல அமைப்பு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
அதேபோன்று கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வுகளில் பள்ளி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு வருடா வருடம் பரிசுகளும், ஊக்கத்தகையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 15.08.24 வியாழக்கிழமை 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இந்த வருடமும் GPM மக்கள் மேடை சார்பாக கேடயமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.