மணமேல்குடி ஒன்றியத்தில்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி.
மணமேல்குடி,ஜூலை.30-
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலின்படி.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தலைமையில் புதிய பாரத திட்டத் தன்னார்வலர்களுக்கான பயிற்சினை தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 மையங்கள் புதிய பாரத திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு இதுவரை 1029 கற்போர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு, கற்போருக்கு வாசிக்க எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் தன்னுடைய கையெழுத்தை போடுவதற்கும், தன்னுடைய ஊர் பெயர் ,குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர்கள், சிறு சிறு வார்த்தைகளை எழுத வைத்தல் போன்றவற்றை பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்ப கூட்டத்தில் 51 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியினை ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார் பன்னீர் செல்வம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.