மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0 தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி.
மணமேல்குடி,ஜூலை.28-
மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0 தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஐயா வழிகாட்டுதலின்படி,
மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி 2.0 தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சியினை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தொடங்கி வைத்தார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியின் நோக்கம்
அனைத்து குழந்தைகளுக்கும் மொழிப்பாடத்தில் அடிப்படை கற்றல் திறன்களை முழுமையாக அடைய செய்தல் வேண்டும் என்றும், தன்னார்வலர் ஒவ்வொரு பாடத்தையும் குறிப்பிட்டுள்ள பாட வேலைகளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் அடிப்படை திறங்களை பெற்றுள்ளனரா என்பதனை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவுத் திறன் அட்டவணையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் உங்களுக்கு தெரியுமா என்ற பகுதியில் தன்னார்வலரின் ஆர்வத்தை தூண்டு விதமாக கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தன்னார்வலர் அறிந்துவா பகுதியில் கொடுக்கப்பட்ட தகவல்களை மாணவர்கள் அவர்களின் தாத்தா பாட்டி அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள முதியோர் உடன் கேட்டு தகவலை சேகரிக்க வேண்டும் என்றும் இப்பயிற்சியில் கொடுக்கப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு அடிப்படை எளிய கணக்குகள் திறன் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்பயிற்சியினை இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்வில் 22 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.