மீண்டும் பேருந்து சேவையை தொடங்கிய R.O.S மினி பஸ்; பொதுமக்கள் மகிழ்ச்சி.
நீண்ட வருடங்களாக மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்து சேவையை வழங்கிக் கொண்டிருந்த R.O.S மினி பேருந்து 9 மாத காலங்களாக இயங்காமல் இருந்தது.
மக்களின் கோரிக்கையை ஏற்று அதன் அடிப்படையில் தற்போது புதிய பொலிவுடன் மக்கள் பணி செய்வதற்காக மீண்டும் பேருந்து சேவையை துவக்கி உள்ளது.
ஆகையால் அன்றாட பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கும் மற்றும் தொழிலுக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் மற்றும் மக்கள் வெளியூர் பயணம் செல்வதற்காக இந்த R.O.S மினி பேருந்து மீண்டும் தனது பேருந்து சேவையை துவங்கி உள்ளது.
மேலும் மீமிசல் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கோபாலப்பட்டினம் உள்ளிட்ட சில கிராமங்களையும் புதிதாக இணைத்து அப்பகுதிகளுக்கும் பேருந்து சேவையை கூடுதலாக்கியுள்ளது.
இப்பேருந்து சேவையை மீண்டும் துவக்குவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை செய்த சமூக ஆர்வலர்களுக்கும், பேருந்து உரிமையாளர்களுக்கும் GPM தலைமுறை மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
வழித்தடங்கள்
தீயத்தூர் to பாக்கம்
வழி— பாதிரக்குடி, தளவரை, சேமங்கோட்டை, அரசநகரிபட்டிணம், புதூர், மீமிசல், கோபாலபட்டிணம், கீழஏம்பல், கிளாரவயல்.
பாக்கம் to தீயத்தூர்
வழி—– கிளாரவயல், கீழஏம்பல், கோபாலபட்டிணம், மீமிசல், புதூர், அரசநகரிபட்டிணம் சேமங்கோட்டை, தளவரை, பாதிரக்குடி.
தீயத்தூர் to மீமிசல்
வழி—- பாதிரக்குடி, தளவரை, சேமங்கோட்டை, அரசநகரிபட்டிணம், புதூர், கோபாலபட்டிணம், மீமிசல்,
மீமிசல் to தீயத்தூர்
கோபாலபட்டிணம், மீமிசல், புதூர், அரசநகரிபட்டிணம் சேமங்கோட்டை, தளவரை, பாதிரக்குடி.





