மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து:
கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க பெட்டி வைப்பு.
புதுக்கோட்டை, மார்ச்.19-
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வசதியாக மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் அந்த பெட்டியை மாவட்ட நிர்வாகம் சார்பில் வைத்திருந்தனர். அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை செலுத்தினர். இதில் அந்த பெட்டி நிரம்பியது.
இதேபோல கலெக்டர் அலுவலகத்தின் உள் பகுதியிலும் மனுக்கள் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற நாட்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1