மீண்டும் காசோலை அதிகாரம் பெற்ற நாட்டானி புரசக்குடி ஊராட்சிமன்றத் தலைவர்.
மீமிசல்,
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டானி புரசக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் சீதாலெட்சுமியிடம் இருந்து காசோலை அதிகாரத்தை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 203-இன் கீழ் ரத்து செய்து 04.01.2024 அன்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா I.A.S உத்தரவிட்டார்.
மேலும், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்பொழுது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 203-ன் கீழ் நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பமிடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சிகள்) உத்தரவிடப்பட்டதை ரத்து செய்து “மீண்டும் ஊராட்சி மன்ற தலைவருக்கே காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா I.A.S உத்தரவிட்டுள்ளார்.