ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் தகவல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 52 பள்ளி மாணவ/மாணவியர் விடுதிகள் மற்றும் 5 கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள், 01 பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர் விடுதி என மொத்தம் 58 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விடுதிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஏற்பட்டுள்ள காலியிடங்களில் சேர்க்கை பெற பள்ளிகளில் பயிலும் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ/மாணவியர்கள் கல்லூரிப்பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இந்த விடுதியில் சேரலாம்.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிறவகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.

12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி இலவசமாக வழங்கப்படும். இந்த விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும் மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். 

5 கிலோ மீட்டர் நிபந்தனை மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும் பொருந்தாது.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுடைய மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல், நன்னடத்தைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 09.07.2024 -க்குள் முதற்கட்ட மாணாக்கர்கள் தெரிவு பணியினை மேற்கொள்வதற்கு Central Monitoring Dashboard வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button