ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகையை பதிய வேண்டுகோள்

புதுக்கோட்டை, மார்ச்.7-
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகையை பதிய வேண்டுகோள்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கைவிரல் ரேகை பதிவினை இ-கே.ஓய்.சி. பதிவிற்காக சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் பதிவு செய்திட சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏ.ஏ.ஒய் மற்றும் பி.எச்.எச். பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்குரிய ரேஷன் கடைகளில் பதிவு செய்திட வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1