தமிழ்நாட்டில் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகளைத் தொடங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளையும் திறக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
+1
+1
+1
+1