மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தேர்வு கூட்டம்.
மணமேல்குடி,ஆக.25-
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று தேர்வு செய்தனர். இக்குழுவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் என 24 உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.
இக்குழுவானது அடுத்த இரண்டு வருடங்களுக்கு பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கட்டமைப்புகளையும், கற்றல் கற்பித்தலில் சிறப்பான மாற்றங்களை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதற்குரிய திரு ரெகுநாததுரை அவர்கள்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி ஆகிய இரண்டு பள்ளிகளில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வின் சிறப்புகளை எடுத்துரைத்து ஆலோசனை வழங்கினார்கள்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார் மற்றும் திரு பன்னீர்செல்வம்
கிராம நிர்வாக அலுவலர்கள் எஸ்.ம்.சி கருத்தாளர் திரு சுந்தர பாண்டியன் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகப்பிரியா ஜெனிட்டா ஆகியோர் பார்வையாளர்களாக செயல்பட்டனர்.