ஆவுடையார்கோவில் அருகே சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி.

ஆவுடையார்கோவில் அருகே சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி.

ஆவுடையார்கோவில் அருகே சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி, நண்பர்கள் படுகாயமடைந்தனர்.

நண்பர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 17). கடையாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (18), குரும்பூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜ் (18).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஆவுடையார்கோவிலில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் பயின்று வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று கல்லூரியில் தேர்வு முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

மாணவர் பலி

ஆவுடையார்கோவில் அருகே நானாக்குடி முக்கம் வளைவு அருகே வந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த சுரேஷ்பாபு இறந்தார். பிரகாஷ், சவுந்தர்ராஜ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த பிரகாஷ் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சவுந்தர்ராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷ்பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இடத்தில் கவனம்

பொதுவாக நானாக்குடி முக்கம் வளைவு என்பது மிகவும் ஆபத்தான வளைவாக இருக்கும், எனவே இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும்.

எனவே வாகன ஓட்டிகள் இந்த வளைவில் செல்லும்பொழுது மெதுவாகவும், கவனமாகவும் செல்லுமாறு கேட்டுகொள்கிறோம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button