மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு; நாளை முதல் தொடக்கம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு; நாளை முதல் தொடக்கம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு; நாளை முதல் தொடக்கம்.

இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 போட்டித்தேர்வுக்கு 3,935 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இப்போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் புதுகே்காட்டை மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியின் போது கட்டணமில்லா பாடக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை தரவும்.

இணையதள முகவரி

இந்த பயிற்சி வகுப்பில் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டும், ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்துவிதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி மாதிரிதேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button