புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி.

புதுக்கோட்டை, பிப்.28-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மினி பஸ்கள்
தமிழ்நாட்டில் பஸ் சேவை இல்லாத வழித்தடங்களில் மினி பஸ் சேவை வழங்கும் பொருட்டு, புதிய விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ் சேவை இல்லாத வழித்தடங்களில் மினி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் 29 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ்களை இயக்கக்கோரி விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் Parivahan.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் நேரில் வருகிற 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
வழித்தடங்கள்
மாவட்டத்தில் புதுக்கோட்டை பஸ் நிலையம்-மகாத்மா கல்லூரி, புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னர்- மிரட்டுநிலை, கந்தர்வகோட்டை- பழைய கந்தர்வகோட்டை, இலுப்பூர் பஸ் நிலையம்- மதுரப்பட்டி, இலுப்பூர் அரசு மருத்துவமனை- எருக்குமணிப்பட்டி, அறந்தாங்கி அக்னி பஜார்- கீழாநிலைக்கோட்டை, ஆவு டையார்கோவில்- நாகுடி, தேனிப்பட்டி- செங்கீரை விலக்கு, நாகுடி-மேல்மங்கலம், அறந்தாங்கி பஸ் நிலையம்- மருதாங்குடி, புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம்- பெருங்குடி, ஆவுடையார்கோவில்- பத்தரசன் கோட்டை விலக்கு, புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம்- புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், ஆலங்குடி பஸ் நிலையம்-மேலவிடுதி, ஆதனக்கோட்டை பழைய பஸ் நிலையம்- கந்தர்வகோட்டை பழைய பஸ் நிலையம், இலுப்பூர் பஸ் நிலையம்-உடையாம்பட்டி ஆகிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கலாம்.
மருத்துவக்கல்லூரி
இதேபோல புதுக்கோட்டை ரெயில் நிலையம், கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம்- பழைய கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி- மேட்டுப்பட்டி, மேட்டுப்பட்டி- பல் மருத்துவ கல்லூரி, நல்லூர் விளக்கு- வலையப்பட்டி, பொன்னமாராவதி- நகரப்பட்டி, அரசமலை கிராஸ் ரோடு -குழிப்பிறை, புதுக்கோட்டை சந்தைபேட்டை- குமரமலை கிரஷர், நச்சாந்துப்பட்டி- குழிப்பிறை, நமணசமுத்திரம்-லட்சுமிபுரம், விராச்சிலை-பாண்டனி, ராங்கியம்-திருமயம், கண்ணனிப்பட்டி-மல்லுப்பட்டி ஆகிய வழித்தடங்களில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.